முகப்பு
இந்தியா

கேரளத்தில் புதிதாக 21,116 பேருக்கு கரோனா

​கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 21,116 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
கோப்புப்படம்
பகிர்:


கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 21,116 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 1,30,768 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் 21,116 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 16.15 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளன.

மேலும் 19,296 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 197 பேர் நோய்த் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 19,246 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 1,79,303 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →