முகப்பு
இந்தியா

நாட்டில் புதிதாக 30,948 பேருக்கு கரோனா

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,948 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 22 ஆகஸ்ட், 2021 at 9:48 AM
கோப்புப்படம்
பகிர்:


நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,948 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 30,948 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,24,24,234 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் 38,487 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 403 பேர் பலியாகியுள்ளனர்.

Advertisement

இதுவரை மொத்தம் 3,16,36,469 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4,34,367 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 3,53,398 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தடுப்பூசி:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 52,23,612 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. நாட்டில் இதுவரை மொத்தம் 58,14,89,377 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.