முகப்பு
இந்தியா

அசாம் மாநிலத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல் 

அசாம் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

அசாம் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 
ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. இதையடுத்து மத்திய பிரதேசம், குஜராத், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், மஹாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 
தற்போது இந்த மாநிலங்களைத் தொடர்ந்து வடகிழக்கு மாநிலமான அசாமிலும் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. அதன்படி, இரவு 11.30 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். 

அதேசமயம், புத்தாண்டையொட்டி டிசம்பர் 31-ஆம் தேதி இந்த கட்டுப்பாடு பொருந்தாது என, அம்மாநில அரசு அறிவித்துள்ளது. உணவகங்கள், காய்கறி, பழக்கடைகள், ஷோரூம்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை இரவு 10.30 மணி வரை மட்டுமே செயல்படலாம். 
திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

முழு கட்டுரையைப் படிக்க →