ம.பி.யில் பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதல்: 13 பேர் பலி
மத்தியப் பிரதேசம் குவாலியர் நகரில் பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 13 பேர் உயிரிழந்தனர்.
மத்தியப் பிரதேசம் குவாலியர் நகரில் பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 12 பெண்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் புரானி சாவ்னி பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று, எதிரே வந்த ஆட்டோ ரிக்ஷாவின் மீது மோதியது. இன்று காலை 7 மணி அளவில் நடைபெற்ற இந்த விபத்தில் 8 பெண்கள், ஆட்டோ டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து மேலும் 4 பெண்கள் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.