முகப்பு
இந்தியா

மக்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்த பாஜக முன்னாள் அமைச்சர்

திரிணமூல் காங்கிரஸ் கட்சியில்  தன்னை இணைத்துக் கொண்ட மேற்குவங்க பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தனது மக்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:24 AM
மக்களவை உறுப்பினர் பாபுல் சுப்ரியோ ராஜிநாமா
பகிர்:

திரிணமூல் காங்கிரஸ் கட்சியில்  தன்னை இணைத்துக் கொண்ட மேற்குவங்க பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தனது மக்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார்.

பாஜக தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த ஜூலை மாதம் மாற்றியமைக்கபட்டபோது பாபுல் சுப்ரியோவிடமிருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த அவர் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்தார். 

தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்வதாக இருந்த அவர் தனது முடிவைக் கைவிட்டார். அதன்பின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் டீரக் ஓபிரைன் முன்னிலையில் திரிணமூல் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்

இந்நிலையில் தான் வகித்துவந்த மக்களவை உறுப்பினர் பதவியை சுப்ரியோ செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தார். அவர் தனது ராஜிநாமா கடிதத்தை மக்களவை பேரவைத் தலைவரிடம் வழங்கியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.