முகப்பு
இந்தியா

கேரளத்தில் புதிதாக 15,876 பேருக்கு கரோனா

கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,876 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:08 AM
கோப்புப்படம்
பகிர்:


கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,876 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 15,876 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 25,654 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 129 பேர் நோய்த் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 1,05,005 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 15.12 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.

கேரளத்தில் மொத்த பலி எண்ணிக்கை 22,779 ஆக உயர்ந்துள்ளது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,98,865 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →