முகப்பு
இந்தியா

அயோத்தி: நூறாண்டு பழமைவாய்ந்த கோயிலிலிருந்து 8 சிலைகள் திருட்டு

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியாவில் உள்ள  நூற்றாண்டு பழமை வாய்ந்த கோயிலில் 8 பழங்காலச் சிலைகள் திருடிப்போயுள்ளன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
கோப்பிலிருந்து
பகிர்:


அயோத்தி: உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள  நூற்றாண்டு பழமை வாய்ந்த கோயிலில் 8 பழங்காலச் சிலைகள் திருடிப்போயுள்ளன.

கோயிலிலிருந்த 8 சிலைகள் காணாமல் போனது குறித்து புதன்கிழமை தெரிய வந்ததைத் தொடர்ந்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் சைலேஷ் குமார் பாண்டே கூறுகையில், கோயிலிலிருந்து திருடுப் போன சிலைகள் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. முதலில் 9 சிலைகள் திருடுப்போனதாக நம்பப்பட்டது. பிறகு, ஒரு சிலை மட்டும் கோயில் வளாகத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகிறோம் என்றார்.

Advertisement

பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோயில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் உள்ளது. புதன்கிழமை காலை கோயிலுக்கு வந்த பூசாரி, கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு கோயில் சிலைகள் திருடிப்போயிருந்ததைப் பார்த்து தகவல் கொடுத்தள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments