இந்தியா

தில்லி: இன்ஸ்டாகிராமில் பெண்களை மிரட்டிவந்த இளைஞர் கைது

DIN

இன்ஸ்டாகிராமில் போலி கணக்குகளை உருவாக்கி பெண்களை தொடர்ந்து மிரட்டிவந்த தில்லியைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தனர். 

இதுகுறித்து காவல்துறை தெரிவித்ததாவது, 

கைது செய்யப்பட்ட இளைஞர் தில்லியில் ஆனந்த் பர்பத்தில் வசிக்கும் மிதுன் திவாரி எனத் தெரியவந்தது. 

கடந்த 17ம் தேதி, சமூக ஊடகத் தளத்தில் பல கணக்குகளை உருவாக்கிய ஒரு நபர்,  தன்னைப் பின்தொடர்ந்து வருவதாகவும், தன்னைக் கடத்திச்சென்று தனது புகைப்படங்களை வைரலாக்குவதாக மிரட்டுவதாகவும் பெண் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்தார் என்று மூத்த காவல்அதிகாரி கூறினார். 

புகாரின் பேரில், காவல்துறையினர் இன்ஸ்டாகிராம் கணக்குகளை ஆய்வு செய்து, அவனை கையும் களவுமாக பிடித்து, கைது செய்தனர். 

22 வயதாகும் திவாரி சமூக வலைத்தளங்களைக் கையாள்வதில் பலே கில்லாடி. இவர் 12-க்கும் மேற்பட்ட பெண்களைப் பின்தொடர்ந்து மிரட்டி வந்தது தெரியவந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்தோ்வில் வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சாதனை

10-ஆம் வகுப்பு தோ்வு: நாமக்கல் குறிஞ்சிப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

சுவாமி விவேகானந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆராய்ச்சி மைய ஆண்டு விழா

திருச்செங்கோடு வித்யா விகாஸ் பள்ளி மாணவி சிறப்பிடம்

கோடைகால கலைப்பயிற்சி முகாம் நிறைவு: 160 மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கல்

SCROLL FOR NEXT