இந்தியா

ஐசிஎம்ஆர் ஆராய்ச்சியினால் இந்தியாவிற்கு தடுப்பூசி: மன்சுக் மாண்டவியா

DIN

புதுதில்லி: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்)  தடுப்பூசி தொடர்பான ஆராய்ச்சியில் இந்தியாவுக்கான தடுப்பூசியை உருவாக்கியது என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று மக்களவையில் தெரிவித்தார். 

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் கேள்விக்கு மாண்டவியா பதிலளித்தார்.

மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறிய பதிலில், ஐசிஎம்ஆர் ஆராய்ச்சியால் ஓமிக்ரான் போன்ற கரோனா நோயை இந்தியா எளிதாகக் கடந்தது என்று கூறினார்.

உலகில் மூன்றாவது கரோனா அலையில் இறந்தவர்களின் எண்ணிக்கை, இரண்டாவது அலையைப் விட குறைவாக இருந்தது. ஆனால், பெரும்பான்மையான மக்கள் தடுப்பூசி போடப்பட்டதாலும், தடுப்பூசி உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதாலும், இந்தியா மூன்றாவது அலையை எளிதாகக் கடந்தது என்று மாண்டவியா கூறினார். 

கரோனா மேலாண்மை மட்டுமின்றி மற்ற வகை மருத்துவ ஆராய்ச்சிகளையும் இந்த நிறுவனம் தொடர்ந்து ஆராய்ச்சி செய்யும் என்று மாண்டவியா கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT