நாட்டின் ஒரு பக்கம் கனமழை; மறுபக்கம் அனல் கொளுத்தும் 
இந்தியா

நாட்டின் ஒரு பக்கம் கனமழை; மறுபக்கம் வெப்ப அலை: வானிலை ஆய்வு மையம்

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த ஐந்து நாள்களுக்கு கனமழை பெய்யும் என்றும், நாட்டின் இதர பகுதிகளில் அனல் கொளுத்தும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ANI


புது தில்லி: நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த ஐந்து நாள்களுக்கு கனமழை பெய்யும் என்றும், நாட்டின் இதர பகுதிகளில் அனல் கொளுத்தும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு மாநிலங்களாக அசாம், மேகாலயம், அருணாசலம், நாகாலாந்து, மணிப்பூர், சிக்கிம், மேற்கு வங்கத்தின் ஒரு பகுதிகளில் அடுத்த ஐந்து நாள்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது, அசாம், மேகாலயம், அருணாசலப் பிரதேசத்தின் ஒரு சில பகுதிகளில் அடுத்த ஐந்து நாள்களுக்கு கனமழை பெய்யும்; நாகாலாந்து, மணிப்பூர் பகுதிகளில் ஏப்ரல் 1ஆம் தேதியும், மேற்கு வங்கத்தின் ஒரு சில பகுதிகளிலும், சிக்கிமிலும் ஞாயிறு மற்றும் திங்களன்று கனமழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல, இமாசலம், தெற்கு ஹரியானா, தில்லி, தென்மேற்கு உ.பி., குஜராத், மகாராஷ்டிரம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இன்றும் நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என்று எச்சரித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருட்செல்வா் மொழிபெயா்ப்பு விருதாளா்கள் அறிவிப்பு: அக்.2-இல் சென்னையில் விருது வழங்கும் விழா

ரூ. 2 லட்சம் கோடி முதலீட்டுக்கு வழி வகுத்துள்ள ஜிஎஸ்டி சீா்திருத்தம்: நிா்மலா சீதாராமன்

வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் வண்ணப் புகைப்படம்: பிகாா் தோ்தலில் அறிமுகம்

2002, 2005-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியல் அடிப்படையில் தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தம்: தோ்தல் துறை முடிவு

திருவண்ணாமலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

SCROLL FOR NEXT