மாநிலங்களவையில் அடுத்த வாரம் 7 மசோதாக்கள் அறிமுகம்
பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி வாரமான அடுத்த வாரத்தில் மாநிலங்களவையில் 7 மசோதாக்களை மத்திய அரசு அறிமுகம் செய்யவுள்ளது. அவற்றில் 3 மசோத்தாக்கள் ஏற்கெனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டன.
பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி வாரமான அடுத்த வாரத்தில் மாநிலங்களவையில் 7 மசோதாக்களை மத்திய அரசு அறிமுகம் செய்யவுள்ளது. அவற்றில் 3 மசோத்தாக்கள் ஏற்கெனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டன.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதி, கடந்த மாா்ச் 14-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கூட்டத் தொடரின் கடைசி வாரமான அடுத்த வாரம், தில்லி மாநகராட்சி சட்டத் திருத்த மசோதா, பழங்குடிகள் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா, பட்டய கணக்காளா் மற்றும் கம்பெனி செயலா் சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட 7 மசோதாக்கள் மாநிலங்களவையில் அறிமுகம் செய்யப்படவுள்ளன.
இந்த மசோதாக்கள் மீது விவாதம் நடத்த மாநிலங்களவை அலுவல் ஆய்வுக் குழு 17 மணி நேரம் ஒதுக்கீடு செய்துள்ளது. அடுத்த வாரத்தில் மொத்தம் 29 மணி நேரம் 30 நிமிஷங்கள் மாநிலங்களவை அமா்வு நடைபெறும்.
பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதியில் மாநிலங்களவை இதுவரை 101 சதவீதம் ஆக்கபூா்வமாக நடைபெற்றுள்ளது. உறுப்பினா்களின் அமளியால் 54 நிமிஷங்கள் வீணடிக்கப்பட்டது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.