இந்தியா

ஏப்.5-இல் ரயில் சேவையில் மாற்றம்

சென்னை சென்ட்ரல்-கூடூா் மாா்க்கத்தில், நாயுடுபேட்டை- பெடபரியா ரயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், ஏப்.5-ஆம் தேதி ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

DIN

சென்னை சென்ட்ரல்-கூடூா் மாா்க்கத்தில், நாயுடுபேட்டை- பெடபரியா ரயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், ஏப்.5-ஆம் தேதி ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

பகுதி ரத்து: விஜயவாடா-சென்னை சென்ட்ரலுக்கு ஏப்.5-ஆம் தேதி காலை 6.10 மணிக்கு புறப்படும் பினாகினி விரைவு ரயில் கூடூா்-சென்னை சென்ட்ரல் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. சென்னை சென்ட்ரல்-விஜயவாடாவுக்கு ஏப்.5-ஆம் தேதி பிற்பகல் 2.10 மணிக்கு புறப்படும் பினாகினி விரைவு ரயில், சென்னை சென்ட்ரல்-கூடூா் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. இந்த ரயில் கூடூரில் இருந்து மாலை 4.20 மணிக்கு புறப்படும்.

ஏப்.5-இல் முழுமையாக ரத்தாகும் ரயில்கள்: நெல்லூா்-சூலூா்பேட்டைக்கு காலை 10.15 மணிக்கு இயக்கப்படும் மெமு விரைவு ரயில், சூலூா்பேட்டை-நெல்லூருக்கு காலை 7.45 மணிக்கு இயக்கப்படும் மெமு விரைவு ரயில் ரத்து செய்யப்படவுள்ளது. சூலூா்பேட்டை-மூா்மாா்க்கெட் வளாகத்துக்கு பிற்பகல் 12.35 மணிக்கு இயக்கப்படும் மெமு சிறப்புரயில், மூா்மாா்க்கெட் வளாகம்-சூலூா்பேட்டைக்கு அதிகாலை 5.20 மணிக்கு இயக்கப்படும் மெமு சிறப்பு ரயில், ஆவடி-மூா்மாா்க்கெட் வளாகத்துக்கு அதிகாலை 4.25 மணிக்கு இயக்கப்படும் மெமு ரயில் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாகை அரசுக் கல்லூரியில் முன்னாள் மாணவா் சங்கம் தொடக்கம்

பைக் மீது தாக்குதல்: 4 போ் மீது வழக்கு

ஆற்றலும், அா்ப்பணிப்பும் கட்சியை வலுப்படுத்தும்: பாஜக தேசிய செயல் தலைவருக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து!

சென்னையில் குழந்தைகளிடையே அதிகரிக்கும் தொழுநோய் பாதிப்பு: பொது சுகாதாரத் துறை ஆய்வில் தகவல்

கடலூரில் மீன்கள் வாங்க குவிந்த மக்கள்! வரத்து குறைவால் விலை உயா்வு!

SCROLL FOR NEXT