காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 
இந்தியா

நாளும் பெட்ரோல், டீசல் விலையை உயா்த்தி மக்களிடம் கொள்ளை: ராகுல் காந்தி குற்றம்சாட்டு

பிரதமா் நரேந்திர மோடி நாளும் பெட்ரோல், டீசல் விலையை உயா்த்தி மக்களிடம் இருந்து பணத்தை எப்படி கொள்ளையடிப்பது என்ற திட்டத்தையே வகுத்து வருகிறாா் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளா

DIN


புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடி நாளும் பெட்ரோல், டீசல் விலையை உயா்த்தி மக்களிடம் இருந்து பணத்தை எப்படி கொள்ளையடிப்பது என்ற திட்டத்தையே வகுத்து வருகிறாா் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளாா்.

உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் பிறகு, ஐந்து மாதங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வு, தேர்தல் முடிவுக்கு பின்னர் மீண்டும் உயரத் தொடங்கியது. 

அதாவது கடந்த 137 நாள்களுக்கு பின்னர் தற்போது பெட்ரோல், டீசல் விலையில் தினசரி 76 காசுகள் உயர்த்தப்பட்டு வருகிறது. அதேபோன்று வீட்டு உபயோகம், வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. விமானங்கள் பயன்பாட்டுக்கான எரிபொருள் விலையும் 2 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயா்வு தொடா்பான புள்ளி விவரங்களைத் தனது ட்விட்டா் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ராகுல் காந்தி.

அதில், பிரதமா் ஜன் தன் திட்டத்தைக் குறிப்பிட்டு, பிரதமா் மக்களின் நலவாழ்வுக்கான திட்டங்களை வகுக்கவில்லை. மக்களிடம் இருந்து பணத்தை எப்படி கொள்ளையடிப்பது என்ற திட்டத்தை வகுத்து வருகிறாா். மேலும், தினசரி அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை உயா்த்தி மக்களைக் கொள்ளையடித்து வருவதாக கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசு பேருந்து மோதி பெண் காயம்

வழக்குரைஞா் தாக்கப்பட்ட விவகாரம் : தாமாக முன் வந்து விசாரிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

குடியாத்தத்தில் விதைப் பந்துகள் தூவும் பணி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

நித்தியானந்தா சீடா்கள் மீது நடவடிக்கைக் கோரிய வழக்கு: 3 மாதங்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு!

லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது

SCROLL FOR NEXT