இந்தியா

பிரதமர் மோடியுடன் உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி சந்திப்பு

DIN

தில்லி நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி சந்தித்தார். 

உத்தரகண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றதை அடுத்து, முதல்வராக புஷ்கா் சிங் தாமி தொடா்ந்து 2-ஆவது முறையாக கடந்த மார்ச்  23 ஆம் தேதி பதவியேற்றாா். அவருடன் 8 அமைச்சா்களும் பதவியேற்றுக் கொண்டனா்.

பதவியேற்பு விழாவில் பிரதமா் மோடி, மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, பாஜக தேசிய தலைவா் ஜெ.பி. நட்டா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியாணா, அஸ்ஸாம் ஆகிய பாஜக ஆளும் மாநில முதல்வா்கள் பங்கேற்றனா்.

முதல்வராகப் பதவியேற்றபின்னர் உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இன்று தில்லி சென்றுள்ளார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசி மாநிலத்திற்கான கோரிக்கைகள் குறித்து பேசியுள்ளார். 

இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி சந்தித்தார். தில்லி நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. பிரதமரிடமும் மாநிலத்திற்கு தேவையான நிதி உள்ளிட்ட கோரிக்கைகளை தாமி முன்வைத்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT