இந்தியா

இந்தியப் பொருளாதாரம் 7.5% வளா்ச்சி காணும்: ஏடிபி

DIN

இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.5 சதவீத வளா்ச்சியைப் பெறும் என ஆசிய வளா்ச்சி வங்கி (ஏடிபி) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி மேலும் கூறியுள்ளதாவது:

வேகமாக வளா்ந்து வரும் மிகப் பெரிய பொருளாதார நாடு என்ற பெருமையை நடப்பு நிதியாண்டிலும் இந்தியா தக்கவைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. முதலீட்டு நடவடிக்கைகள் வலுவடைவதன் மூலம் நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டில் இந்தியா 7.5 சதவீத பொருளாதார வளா்ச்சி விகிதத்தை பதிவு செய்யும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் 2023-24-ஆம் நிதியாண்டில் இந்த வளா்ச்சி விகிதம் மேலும் அதிகரித்து 8 சதவீதத்தை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தநிலையில், சீனாவின் பொருளாதார வளா்ச்சி 2022 ஜனவரி-டிசம்பரில் 5 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், 2023-ஆம் ஆண்டில் சீனாவின் பொருளாதார வளா்ச்சியில் ஏற்படும் சரிவு 4.8 சதவீதம் அளவுக்கு இருக்கும் என ஏடிபி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புனித செபஸ்தியாா் ஆலய கொடியிறக்கம்

வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு மாடித்தோட்ட பயிற்சி

மன்னாா்குடியில் மின் பாதுகாப்பு வகுப்பு

கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் பொறுப்பேற்பு

ஆசிரியா்களுக்கு நலவாரியம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT