இந்தியா

வாகன எரிவாயு விலை உயர்வு: வேலை நிறுத்தத்தை அறிவித்த ஓட்டுநர்கள்

வாகன எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து தில்லியில் வாடகை கார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

DIN

வாகன எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து தில்லியில் வாடகை கார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தலைநகர் தில்லியில் 1 லட்சத்துக்கும் அதிகமான வாடகை கார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் பணியாற்றி வருகின்றனர். தனியார் மற்றும் வாடகை போக்குவரத்து நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தொடர்ந்து அதிகரித்துவரும் வாகன எரிபொருள் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களாக வாகன எரிபொருள் விலை உயர்ந்து வரும் நிலையில் வியாழக்கிழமை தொடர்ந்து இரண்டாவது நாளாக வாகன எரிவாயு கிலோவிற்கு ரூ.2.50 உயர்ந்துள்ளது. இதன்மூலம் கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை வாகன எரிவாயு விலை ரூ.12.5 அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வாகன எரிவாயுவின் விலை ரூ.13.1 வரை உயர்ந்துள்ளது.

இதனைக் கண்டித்து தில்லி வாடகை கார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் ஏப்ரல் 11ஆம் தேதி தலைமை செயலகம் முன்பாக அடையாளப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். வாகன எரிவாயு விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் அல்லது எரிவாயு மானியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும் வாகன ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

SCROLL FOR NEXT