முகப்பு
இந்தியா

பெங்களூருவில் 7 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: தீவிர சோதனை

பெங்களூருவில் 7 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக நகர காவல் கண்காணிப்பாளர்  தெரிவித்துள்ளார்.

Updated On : 8 ஏப்ரல், 2022 at 3:28 PM
பகிர்:

பெங்களூருவில் 7 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக அந்நகரக் காவல் கண்காணிப்பாளர்  தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் உள்ள 7 பள்ளிகளுக்கு இமையில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் தொடர்புடைய பள்ளிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருவதாக அந்நகரக் காவல் கண்காணிப்பாளர் கமல் பண்ட் தெரிவித்துள்ளார்.

மேலும், அப்பள்ளிகளில் இருந்த மாணவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.