கோப்புப்படம் 
இந்தியா

ஏ.சி. வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

கர்நாடகத்தில் ஏ.சி. வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

DIN

கர்நாடகத்தில் ஏ.சி. வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

கர்நாடக மாநிலம் விஜயநகர மாவட்டத்தில் மரியம்மனஹள்ளி கிராமத்தில் வெங்கட் பிரசாந்த் (42), அவரது மனைவி சந்திரகலா)(38), மகன் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். 

நேற்று நள்ளிரவு 12.40 மணியளவில் ஏ.சி. வெடித்து, வீடு முழுவதும் தீப்பற்றியுள்ளது. இதில் நால்வருமே உயிரிழந்தனர். 

ஏ.சி.யில் இருந்து வாயு கசிந்து, பின்னர் மின் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

எனினும், கடன் தொல்லை அல்லது மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டவர்களா? என்ற கோணத்திலும் காவல்துறை விசாரித்து வருகிறது. 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நினைவுகள்... சுதா

கலைமாமணி விருது பெற்ற திரைக் கலைஞர்கள்! | Tamil Cinema | TNGovt | Award

ஆஸ்திரேலியாவில் சிறியரக விமானம் விபத்து: 3 பேர் பலி

என்ன சுகம் பாடல்!

காரைக்கால் ஜிப்மா் மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

SCROLL FOR NEXT