ராகுல்காந்தி 
இந்தியா

‘எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்’: ராகுல்காந்தி அழைப்பு

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்பட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

DIN

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்பட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் சரத் யாதவை வெள்ளிக்கிழமை தில்லியில் சந்தித்து பேசினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, “பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்” என வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், “பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்க்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்படுவது குறித்தும், அதற்கான செயல்திட்டத்தை ஏற்படுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது” எனவும் தெரிவித்தார்.  

மேலும், “நாம் அனைவருக்குமிடையே ஒற்றுமையை விதைக்க வேண்டி இருக்கிறது. நாடு சகோதரத்துவத்துடன் பயணிக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். சரத் யாதவ் உடன் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

இந்த சந்திப்பின்போது சரத் யாதவ் “ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

திற்பரப்பு அருவியில் குளிக்க 4 வது நாளாகத் தடை!

இன்று உருவாகிறது சென்யார் புயல்!

SCROLL FOR NEXT