முகப்பு
இந்தியா

நொய்டாவில் கடந்த 3 நாள்களில் 4 பள்ளிகளில் 23 பேருக்கு கரோனா

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில், கடந்த 3 நாள்களில் மட்டும் 4 பள்ளிகளைச் சேர்ந்த 23 மாணவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 13 ஏப்ரல், 2022 at 4:43 PM
நொய்டாவில் கடந்த 3 நாள்களில் 4 பள்ளிகளில் 23 பேருக்கு கரோனா
பகிர்:


புது தில்லி: உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில், கடந்த 3 நாள்களில் மட்டும் 4 பள்ளிகளைச் சேர்ந்த 23 மாணவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

புது தில்லியின் அருகில் இருக்கும் நொய்டாவில், இத்தனை மாணவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது பெரும் கவலையை உருவாக்கியுள்ளது.

ஒரே பள்ளியைச் சேர்ந்த 13 மாணவர்களுக்கு நேற்று கரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அப்பள்ளி மூடப்பட்டது. இதுவரை பள்ளி மாணவர்கள் 23 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Advertisement

பள்ளியில் கரோனா அறிகுறி இருக்கும் மாணவர்களுக்கு மட்டுமே பரிசோதனை நடத்தப்படுகிறது. சில பள்ளிகளிலிருந்து இதுவரை தகவல்கள் இல்லை என்றும் கூறப்படுகிறது.

நாட்டில் ஒரு நாள் கரோனா பாதிப்பு இன்று திடிரென உயர்ந்துள்ளது. ஆயிரத்துக்கும் கீழ்  கரோனா பாதிப்பு பதிவாகிவந்த நிலையில், 1,088 ஆக இன்று அதிகரித்திருக்கிறது. அதேவேளையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை நாட்டில் 10,870 ஆகக் குறைந்திருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.