இந்தியா

கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா ராஜிநாமா?

DIN

லஞ்சப் புகார் தெரிவித்த ஒப்பந்தக்காரர் உயிரிழந்த விவகாரத்தில் கர்நாடக அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா தனது பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தார்.

பெலகாவியைச் சேர்ந்த அரசு சிவில் ஒப்பந்ததாரரான சந்தோஷ் பாட்டீல், அரசு ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு 40 சதவீதம் கமிஷன் கேட்பதாக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா மீது கடந்த மார்ச் 30-ஆம் தேதி குற்றம் சாட்டியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து கடந்த ஏப்.12-ஆம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இறப்பதற்கு முன் அவர் எழுதிய கடிதத்தில் தனது மரணத்திற்கு அமைச்சர் ஈஸ்வரப்பாதான் காரணம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரம் அம்மாநில அரசியலில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அமைச்சர் ஈஸ்வரப்பா மீது காவல்துறையினர் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் பலத்த அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் கே.எஸ்.ஈஸ்வரப்பா தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ராஜிநாமா கடிதத்தை நாளை முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் வழங்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT