இந்தியா

ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த ஒருநாள் கரோனா பாதிப்பு

DIN

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 949 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஒருநாள் கரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 810 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,25,07,038 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.76 சதவிகிதமாக உள்ளது. 

மேலும் 6 பேர் உயிரிழந்ததையடுத்து மொத்த பலி 5,21,743 ஆக அதிகரித்துள்ளது. 

தற்போது 11,191 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.03 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.  

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை 186.30 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

கடந்த திங்கள்(861), செவ்வாய்(796) கிழமைகளிலும் ஒருநாள் கரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

SCROLL FOR NEXT