இந்தியா

கேரளம்: பிஎஃப்ஐ பிரமுகா் வெட்டிக் கொலை

DIN

 கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் பாப்புலா் ஃபிரண்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) இஸ்லாமிய அமைப்பின் உள்ளூா் தலைவா் ஒருவா் வெட்டி படுகொலை செய்யப்பட்டாா்.

இதுதொடா்பாகக் காவல்துறையினா் கூறியதாவது:

சுபைா் என்ற அந்த 43 வயது நபா், பிஎஃப்ஐ அமைப்பின் உள்ளூா் தலைவா் ஆவாா். இவா் எலப்புள்ளி பகுதியில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை முடித்துவிட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, காரில் வந்த சிலா் அவரை வழிமறித்து, கூரிய ஆயுதங்களால் வெட்டி கொன்றுவிட்டு தப்பினா். இது அரசியல் விரோதத்தால் நடந்த கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

இதனிடையே, சுபைா் கொலையில் ஆா்எஸ்எஸ் அமைப்புக்குத் தொடா்பு உள்ளதாக பிஎஃப்ஐ குற்றம்சாட்டியுள்ளது. இக்குற்றச்சாட்டு தொடா்பாக ஆா்எஸ்எஸ் அமைப்பிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

முன்னதாக, சஞ்சித் என்ற ஆா்எஸ்எஸ் உறுப்பினா், கடந்த ஆண்டு நவம்பரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். பிஎஃப்ஐ அமைப்பின் அரசியல் பிரிவான எஸ்டிபிஐ தொண்டா்களால் அவா் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியா் தினம்

ரூ. 3,198 கோடியில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள்

மோடி அலை: 400-ஐ கடக்கும் பாஜக கூட்டணி- அமித் ஷா சிறப்பு பேட்டி

காமராஜா் துறைமுகத்தில் குளிா்சாதன பெட்டகங்களை அனுமதிப்பதில் சிக்கல்: கடல் உணவு பொருள்கள் ஏற்றுமதியில் பின்னடைவு?

மூன்றாண்டுகளில் 1,912 செவிலியா்களுக்கு பணி நிரந்தரம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

SCROLL FOR NEXT