கரோனா அபாயப் பகுதியாக மாறிவரும் நொய்டா: உதவி எண்கள் அறிவிப்பு
உத்தரப்பிரதேச மாநிலம் கௌதம் புத் நகர் பகுதியில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்திருப்பது அப்பகுதி சுகாதார அதிகாரிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
நொய்டா: 14 குழந்தைகள் உள்பட 70 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, உத்தரப்பிரதேச மாநிலம் கௌதம் புத் நகர் பகுதியில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்திருப்பது அப்பகுதி சுகாதார அதிகாரிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, நொய்டா மற்றும் புது தில்லியில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 218 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க.. அடுத்த அலை உருவாகுமா? கேள்விக்குக் கிடைத்த நல்ல பதில்
வெள்ளிக்கிழமை காலை முதல் இன்று காலை வரையிலான நேரத்தில் 70 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இதே காலக்கட்டத்தில் கரோனா பாதித்திருந்த 8 பேர் குணமடைந்துள்ளனர் என்கிறது புள்ளிவிவரம்.
கரோனா பாதிப்பு அல்லது அறிகுறி தெரிந்தால் உடனடியாக பொதுமக்கள் தொடர்பு கொள்ள இலவச எண் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் 1800492211 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ அல்லது cmogbnr@gmail.com ncmogbnr@gmail.com என்ற மின்னஞ்சலிலோ தகவல் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.