கோப்புப்படம் 
இந்தியா

பிகார் இடைத்தேர்தல்: போச்சான் தொகுதியில் ஆர்ஜேடி வெற்றி

பிகார் மாநிலம் போச்சான் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியான ராஷ்டீரிய ஜனதா தள (ஆர்ஜேடி) வேட்பாளர் அமர் பஸ்வான் அபார வெற்றி பெற்றுள்ளார்.

DIN


பிகார் மாநிலம் போச்சான் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியான ராஷ்டீரிய ஜனதா தள (ஆர்ஜேடி) வேட்பாளர் அமர் பஸ்வான் அபார வெற்றி பெற்றுள்ளார்.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் போச்சான் தொகுதியில் விகாஷீல் இன்சான் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் முசாஃபீர் பஸ்வான். அவர் உயிரிழந்ததையடுத்து, இந்த தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 12-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.

ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பில் மறைந்த முசாஃபீர் பஸ்வான் மகன் அமர் பஸ்வான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இடைத்தேர்தலில் எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பேபி குமாரியைவிட 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் கூடுதலாகப் பெற்று அமர் பஸ்வான் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார்.

அமர் பஸ்வான் 82,116 வாக்குகளையும், பேபி குமாரி 45,353 வாக்குகளையும் பெற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முத்துக்கள் மலரும்... நிகிதா தத்தா!

பருவம்... மாளவிகா மேனன்!

கோல்டன்... திவ்ய பாரதி!

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

SCROLL FOR NEXT