விவசாயிகளின் மகள்களுக்கு எனது ஊதியம்: ஹர்பஜன் சிங்
விவசாயிகளின் மகள்களுடைய கல்விக்கு தனது மாநிலங்களவை ஊதியத்தை செலவழிக்கவுள்ளதாக கிரிக்கெட் வீரரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் மகள்களுடைய கல்விக்கு தனது மாநிலங்களவை ஊதியத்தை செலவழிக்கவுள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இதுபற்றிய அவரது சமூக ஊடகப் பதிவு:
"மாநிலங்களவை உறுப்பினராக எனது ஊதியத்தை விவசாயிகளினுடைய மகள்களின் கல்வி மற்றும் நலத் திட்டங்களுக்குப் பங்களிக்க விரும்புகிறேன். நாடு மேம்படைவதற்கானப் பங்களிப்பை ஆற்ற நான் வந்துள்ளேன். அதற்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். ஜெய் ஹிந்த்."
இதையும் படிக்க | பஞ்சாபில் ஜூலை 1 முதல் வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம்: இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பஞ்சாபில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 117 இடங்களில் 92 இடங்களில் ஆம் ஆத்மி வென்றது. இதையடுத்து, பஞ்சாபில் 5 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 31-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஆம் ஆத்மி வேட்பாளராக ஹர்பஜன் சிங்கும் போட்டியிட்டார். ஆனால், வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததையடுத்து, ஹர்பஜன் சிங் உள்ளிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர்கள் 5 பேரும் போட்டியின்றித் தேர்வானதாக அறிவிக்கப்பட்டது.