முகப்பு
இந்தியா

பிரதமர் மோடி ஏப்.18 முதல் 3 நாள் குஜராத் பயணம்

பிரதமர் மோடி, ஏப்ரல் 18 முதல் 20ஆம் தேதி வரை குஜராத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்.  

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:59 AM
கோப்புப்படம்
பகிர்:

பிரதமர் மோடி, ஏப்ரல் 18 முதல் 20ஆம் தேதி வரை குஜராத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். 
ஏப்ரல் 18ஆம் தேதி மாலை 6 மணியளவில், காந்திநகரில் உள்ள பள்ளிகளுக்கான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை பிரதமர் பார்வையிடுகிறார். ஏப்ரல் 19ஆம் தேதி காலை 9.40 மணியளவில், பனஸ்கந்தாவின் தியோதரில் உள்ள பனஸ் பால்பண்ணை வளாகத்தில், பல்வேறு திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். 

தொடர்ந்து, பிற்பகல் 3.30 மணியளவில் ஜாம் நகரில் உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருந்துகளுக்கான சர்வதேச மையத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். ஏப்ரல் 20ஆம் தேதி காலை 10.30 மணியளவில், காந்திநகரில் சர்வதேச ஆயுஷ் முதலீடு & புதுமைக் கண்டுபிடிப்பு மாநாட்டையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். 
அதன்பிறகு, பிற்பகல் 3.30 மணியளவில், டாஹோத்தில் ஆதிஜாதி மஹா சம்மேளனத்தில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி, சுமார் ரூ.22,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.  

முழு கட்டுரையைப் படிக்க →