இந்தியா

காங்கிரஸ் கட்சிக்கு பிரசாந்த் கிஷோர் வழங்கிய ஆலோசனைகள் என்ன?

DIN

2024 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூகங்கள் தொடர்பாக பிரசாந்த் கிஷோர் ஆலோசனைகள் வழங்கியுள்ளது முக்கிய கவனம் பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் திக்விஜய் சிங், மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மற்றும் அஜய் மாக்கன் உள்ளிட்டோருடன் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோரும் பங்கேற்று 2024 மக்களவைத் தேர்தல் தொடர்பாகவும், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூகங்கள் தொடர்பாகவும் அறிக்கையை வழங்கினார்.

இந்நிலையில் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக வெளியான தகவல்கள் முக்கிய கவனம் பெற்றுள்ளன. அறிக்கையில் 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி உத்தரப்பிரதேசம், பிகார், ஒடிசா ஆகிய மாநிலங்களில் தனித்தும், தமிழ்நாடு, மேற்குவங்கம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் கூட்டணியிலும் போட்டிட வேண்டும் என பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல் மக்களவைத் தேர்தலில் மொத்தம் 370 இடங்களுக்கு மட்டும் காங்கிரஸ் கவனம் செலுத்தினால் போதும் எனவும் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் ஒருவார காலத்திற்குள் இந்த அறிக்கையின் மீது முடிவு எடுக்கப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்மாற்றியில் தீ விபத்து: ஆட்சியா் அலுவலக மின்தூக்கியில் 8 போ் சிக்கித் தவிப்பு

சவீதா பொறியியல் கல்லூரியில் 29,460 புதிய கண்டுபிடிப்புகளுக்கான திட்ட வரைவுகளை காட்சிப்படுத்தி சாதனை

திருப்பத்தூா்: 92.3 சதவீதம் தோ்ச்சி

ஆதிபராசக்தி மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

திருவள்ளூரில் திமுக தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT