இந்தியா

அனுமன் ஜெயந்தி கலவரம்: தில்லியில் 14 பேர் கைது

DIN

அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின்போது கலவரத்தில் ஈடுபட்டவர்களில் 14 பேரை தில்லி காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

தில்லியில் உள்ள ஜஹாங்கீர்பூர் பகுதியில் அனுமன் ஜெயந்தியையொட்டி ஹிந்து அமைப்பு சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. இதில் இரு தரப்பிரனர் இடையே மோதல் ஏற்பட்டது.

கற்களை வீசி தாக்கிதாக்குதல் நடத்தியதால் அனுமன் ஊர்வலத்தில் கலவரம் வெடித்தது. இதனால் காவல் துறையினர் தடியடி நடத்தி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

பின்னர் ஜஹாங்கீர்பூர் பகுதியிலுள்ள இருதரப்பினரிடையே அமைதி திரும்ப மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காவல் துறையினர் ஆலோசனை மேற்கொண்டனர். 

இதில்கலவரத்தில் ஈடுபட்டு கற்களை வீசித் தாக்குதல் நடத்தியவர்களை ஒப்படைக்குமாறும் காவலர்கள் வலியுறுத்தினர். இதன் விளைவாக 8 பேரை காவலர்கள் கைது செய்தனர். 

அதனைத் தொடர்ந்து இன்று மொத்தம் 14 பேரை தில்லி காவல் துறை கைது செய்துள்ளது. காவல் துணை ஆய்வாளரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட 21 வயது இளைஞரையும் காவலர்கள் கைது செய்தனர். மேலும் அந்த இளைஞரிடமிருந்து துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடை அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

SCROLL FOR NEXT