இந்தியா

மோடி அரசின் அலட்சியத்தால் கரோனாவுக்கு 40 லட்சம் இந்தியர்கள் பலி: ராகுல் குற்றச்சாட்டு

DIN

   
புதுதில்லி: கரோனா தொற்றின் தீவிரத்தின் போது மோடி அரசின் அலட்சியத்தால் 40 லட்சம் இந்தியர்கள் உயிரிழந்ததாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 
 
உலக அளவிலான கரோனா இறப்பு எண்ணிக்கையை பகிரங்கமாக வெளியிடுவதற்கான உலக சுகாதார அமைப்பின் முயற்சிகளை இந்தியா தடுத்து நிறுத்துவதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. அதன் ஸ்கிரீன்ஷாட்டை ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார் ராகுல் காந்தி.

அதில், மோடி உண்மையைப் பேசவும் இல்லை, மற்றவர்களையும் பேச விடவும் இல்லை. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை என்று அவர்கள் இன்னும் பொய் சொல்கிறார்கள்.

மேலும் "நான் முன்பே கூறியிருந்தேன், கரோனா பாதிப்பில் அரசின் அலட்சியத்தால் இறந்தது 5 லட்சம் அல்ல, 40 லட்சம் இந்தியர்கள் என்று குற்றம்சாட்டியுள்ள ராகுல்,  உங்கள் பொறுப்பை நிறைவேற்றுங்கள் மோடி,’ தொற்று பாதிப்பால் இறந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும்" என வலியுறுத்தி உள்ளார்.

நாட்டில் இதுவரை கரோனாவுக்கு 5,21,751 பேர் பலியாகி உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT