கோப்புப்படம் 
இந்தியா

நாட்டில் புதிதாக 1,150 பேருக்கு கரோனா

இந்தியாவில் புதிதாக 1,150 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

DIN


இந்தியாவில் புதிதாக 1,150 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாட்டின் கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கடந்த இரண்டு நாள்களாக முறையே 949, 975 ஆகப் பதிவாகி வந்த பாதிப்புகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 1,150 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 954 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 4,25,08,788 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,21,751 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 11,558 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தடுப்பூசி:

மேலும் 12,56,533 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 1,86,51,53,593 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

SCROLL FOR NEXT