முகப்பு
இந்தியா

ஏப்ரல் 21-இல் இந்தியா வருகிறார் பிரிட்டன் பிரதமர்

​பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக ஏப்ரல் 21-ம் தேதி இந்தியா வருகிறார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:00 AM
கோப்புப்படம்
பகிர்:


இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான விரிவான பேச்சுவார்த்தைக்காக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக ஏப்ரல் 21-ம் தேதி இந்தியா வருகிறார்.

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலுள்ள ஆமதாபாத்துக்கு ஏப்ரல் 21-ம் தேதி வருகிறார் போரிஸ் ஜான்சன். பிரிட்டன் பிரதமராக இந்தியாவுக்கு இதுவே அவரது முதல் பயணம். இந்தியா மற்றும் பிரிட்டனிலுள்ள முக்கியத் தொழில் முதலீடுகள் குறித்த அறிவிப்புகள் இடம்பெறவுள்ளன. 

பின்னர் ஏப்ரல் 22-ம் தேதி போரிஸ் ஜான்சன் புதுதில்லி செல்கிறார். அங்கு இந்தியா, பிரிட்டன் இடையிலான பாதுகாப்பு, பொருளாதாரம் குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளது. 

இதனிடையே, ஆமதாபாத்தில் அவர் முக்கியத் தொழில்துறையினரையும் சந்திக்கவுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →