முகப்பு
இந்தியா

அமேதியில் சாலை விபத்து: 6 பேர் பலி, 4 பேர் காயம்

அமேதியின், கௌரிகஞ்ச் பகுதியில் ஜீப் மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர். 

Updated On : 18 ஏப்ரல், 2022 at 12:53 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:30 PM

அமேதியின், கௌரிகஞ்ச் பகுதியில் ஜீப் மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர். 

திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு திரும்பும்போது, ஞாயிறு நள்ளிரவு 12.15 மணிக்கு பாபுகஞ்ச் சாக்ரா ஆசிரமம் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்று காவல்துறை கண்காணிப்பாளர் தினேஷ் சிங் தெரிவித்தார். 

மேலும் அவர் கூறுகையில், 

Advertisement

அமேதியில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்களுடன் ரேபரேலியின் நசிராபாத் பகுதியிலிருந்து ஜீப் திரும்பிக்கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர். 

விபத்தில் இறந்தவர்கள் கல்லு (40), அவரது 8 வயது மகன் சௌரப், கிருஷ்ண குமார் சிங் (30), ஷிவ் மிலன், ரவி திவாரி மற்றும் திரிவேணி பிரசாத் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

காயமடைந்த நான்கு பேர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக லக்னோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்ததாகவும், காயமடைந்தவர்களுக்கு உரியச் சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் லக்னோவில் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

உயிரிழந்த ஆறு பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. லாரி ஓட்டுநர் தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து லாரியை பறிமுதல் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.