இந்தியா

மத்தியப் பிரதேச வன்முறை: 8 நாள்களுக்குப் பிறகு முதல் பலி

DIN


மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் பகுதியில் ராமநவமி ஊர்வலத்தில் நடைபெற்ற வன்முறையில் 8 நாள்களுக்குப் பிறகு இன்று (திங்கள்கிழமை) முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

உயிரழந்தவர் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி முதல் காணவில்லை எனத் தேடப்பட்டு வந்த இப்ரீஷ் கான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தூர் அரசு மருத்துவமனையில் அவரது உறவினர்கள் உடலை அடையாளம் கண்டுள்ளனர். இந்த உயிரிழப்பை மறைக்க காவல் துறையினர் முயற்சித்ததாக இப்ரீஷ் கான் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

கார்கோன் பகுதியில் வன்முறை வெடித்ததிலிருந்தே அவர் காணவில்லை என்றும் இதுதொடர்பாக காவல் துறையிடம் புகார் அளித்துள்ளதாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர். வன்முறையின்போது 7, 8 நபர்களால் அவர் கொலை செய்யப்பட்டதாக உள்ளூர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி கார்கோன் மூத்த காவல் அதிகாரி ரோஹித் கஷ்வானி செய்தியாளர்களிடம் இன்று (திங்கள்கிழமை) கூறியதாவது:

"ஆனந்த் நகர் பகுதியில் வன்முறை ஏற்பட்ட மறுநாள் அடையாளம் தெரியாத உடல் கண்டெடுக்கப்பட்டது. இப்ரீஷ் கான் தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு அவரது குடும்பத்தினரால் உடல் அடையாளம் காணப்பட்டது. அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கா்நாடக முதல்வா் சித்தராமையா உதகை வருகை

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி

'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி

பறவைகள் பூங்கா கட்டுமானப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT