இந்தியா

சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் பினராயி விஜயன்

IANS


திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன், மருத்துவ சிகிச்சைக்காக இந்த மாத இறுதியில் மீண்டும் அமெரிக்கா செல்லவிருக்கிறார்.

இதுவரை அவரது உடல் நலப் பிரச்னை குறித்து வெளியில் தெரிவிக்காத நிலையில், தனது மனைவி மற்றும் உதவியாளர்களுடன் இந்த மாத இறுதியில் அமெரிக்காவில் அமைந்துள்ள புகழ்பெற்ற மயோ மருத்துவமனைக்குச் செல்லவிருக்கிறார்.

சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா செல்லவிருப்பது இது மூன்றாவது முறையாகும். கடந்த ஜனவரி மாதம் பினராயி விஜயன் அமெரிக்கா சென்றிருந்த நிலையில், அது சமூக வலைத்தளங்களல் பேசுபொருளானது. 

கேரளத்தில் சிறந்த சிகிச்சைகள் கிடைப்பதாக முதல்வர் பெருமிதம் கொள்ளும் வேளையிர், அவரே சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வது குறித்து பலரும் விமரிசித்திருந்தனர்.

இந்த நிலையில், ஏப்ரல் 23ஆம் தேதி அமெரிக்கா செல்லவிருக்கும் பினராயி விஜயன், அடுத்த மாதம் நாடு திரும்புவார் என்றும், கடந்த காலங்களைப் போலவே, அவர் மருத்துவமனையில் இருந்தவாறே அமைச்சரவைக் கூட்டத்திலும் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT