இந்தியா

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.123 ஆனது

IANS


ஜெய்ப்பூர்: எரிபொருள் விலை உயர்வு மக்களை கடுமையாக பாதித்துவரும் நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.123-க்கு விற்பனையாகிறது.

இதன் மூலம், நாட்டிலேயே பெட்ரோல் விலை அதிகமாக இருக்கும் இடமாக இது அமைந்துள்ளது.

இதுபோன்ற கடுமையான விலையேற்றம் காரணமாக, ஸ்ரீகங்காநகரில் உள்ள 80 சதவீத பெட்ரோல் நிலையங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மற்ற பகுதிகளைக் காட்டிலும் இங்கு கடும் விலை உயர்வு இருப்பதால் மக்கள் அனைவரும் அண்மையில் இருக்கும் மாவட்டங்களில் உள்ள பெட்ரோல் நிலையங்களுக்குச் சென்று விடுவதால், இந்த பகுதியில் இருக்கும் பெட்ரோல் நிலையங்களுக்கு குறைவான வாடிக்கையாளர்களே உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதுபோல டீசல் விலையும் ஒரு லிட்டருக்கு ரூ.105.31 ஆக உள்ளது. இதுவும் நாட்டிலேயே அதிக விலையாகும்.

ராஜஸ்தான் மாநிலத்தில் இப்படியிருக்க, அண்டை மாநிலமான பஞ்சாபில் பெட்ரோல், டீசல் விலைகள் ரூ.17 மற்றும் ரூ.11 குறைவாக விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT