இந்தியா

ஜிஎஸ்டி வரியில் ஏற்றமா?: நிர்மலா சீதாராமன் விளக்கம்

DIN

ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம் செய்யப்படாது என்றும், வரி விகிதம் உயருவதாக பரவிய தகவல் உண்மைக்கு புறம்பானது எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும், இதில் உணவுப் பொருள்கள் தவிர்த்து மற்ற பொருள்களின் மீதான ஜிஎஸ்டி வரி உயர வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் ஜிஎஸ்டி வரியை உயர்த்துவது தொடர்பாக எந்தவித பரிந்துரையையும் ஜிஎஸ்டி கவுன்சில் வழங்கவில்லை என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

தற்போது அமெரிக்காவிற்கு அரசு முறைப் பயணமாக சென்றுள்ள நிர்மலா சீதாராமன், சர்வதேச நாணய நிதியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்கிறார். 

தற்போது 5%, 12%, 18%, 28% என நான்கு வகைகளில் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. தங்க நகைகள் உள்ளிட்ட சில பொருட்களுக்கு மட்டும் 3% வரி விதிக்கப்படுகிறது. இதில் 5 சதவிகிதம் ஜிஎஸ்டி உள்ள பொருள்களுக்கு 9 சதவிகிதம் ஜிஎஸ்டி வசூலிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியானது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

கேப்டன்சியில் அசத்தும் பாட் கம்மின்ஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது!

’இஸ்லாமியம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

காங்கிரஸ் - சமாஜ்வாதி வென்றால் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்: மோடி

SCROLL FOR NEXT