முகப்பு
இந்தியா

வடக்கு கோவாவில் விரைவில் வருகிறது மின்னணு உற்பத்தி மையம்: அமைச்சர்

கோவா மாநிலத்தில் மின்னணு உற்பத்தி மையம் அமைக்கும் பணியை கோவா துரிதப்படுத்தியுள்ளதாக மாநில தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ரோஹன் கௌண்டே தெரிவித்தார். 

Updated On : 18 ஏப்ரல், 2022 at 5:13 PM
பகிர்:

கோவா மாநிலத்தில் மின்னணு உற்பத்தி மையம் அமைக்கும் பணியை கோவா துரிதப்படுத்தியுள்ளதாக மாநில தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ரோஹன் கௌண்டே திங்கள்கிழமை தெரிவித்தார். 

இதுகுறித்து, மேலும் அவர் தெரிவித்ததாவது, 

கோவா மாநிலத்தின் வடக்குப் பகுதியில் மின் வாகனங்கள் அல்லது மொபைல் போன்களை மையமாகக் கொண்டு மின்னணு உற்பத்தி மையம் அமைக்கும் பணியை கோவா மேற்கொண்டு வருகின்றது. 

Advertisement

வடக்கு கோவாவின் பெர்னெம் தாலுகாவில் உள்ள டீயுமில் மின்னணு உற்பத்தி மையம் அமைக்கும் பணிகளை அவர் ஆய்வு செய்தார். 

மோபாவில் கட்டப்படும் புதிய விமான நிலையத்திற்கு அருகில் மின்னணு உற்பத்தி மையம் அமைக்கப்படும் என்றார் அவர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.