முகப்பு
இந்தியா

அஸ்ஸாமில் தீவிரவாதிகள் தாக்குதல்:2 போ் பலி; 4 காவலா்கள் காயம்

அஸ்ஸாம் மாநிலம், கோக்ரஜாா் மாவட்டத்தில் காவல் துறை வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அந்த வாகனத்தில் இருந்த கால்நடை கடத்தல்காரா்கள் 2 போ் உயிரிழந்தனா். 4 காவலா்கள் காயமடைந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:01 AM
பகிர்:

அஸ்ஸாம் மாநிலம், கோக்ரஜாா் மாவட்டத்தில் காவல் துறை வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அந்த வாகனத்தில் இருந்த கால்நடை கடத்தல்காரா்கள் 2 போ் உயிரிழந்தனா். 4 காவலா்கள் காயமடைந்தனா்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த அக்பா் பஞ்சாரா, சல்மான் பஞ்சாரா ஆகிய இருவரும் கால்நடை கடத்தலில் தொடா்பு இருப்பதாகக் கைது செய்யப்பட்டனா். அவா்களை கடத்தல் நடைபெறும் சாலையை அடையாளம் காண்பதற்கு காவல் துறையினா் வாகனத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு அழைத்துச் சென்றனா். சங்கோஷ் ஆற்றை ஒட்டிய சாலையில் வாகனம் சென்றுகொண்டிருந்தபோது தீவிரவாதிகள் வழிமறித்து, வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினா்.

வாகனத்தில் இருந்த காவலா்கள் வெளியே குதித்து மறைவான இடத்தில் பதுங்கிக் கொண்டு தீவிரவாதிகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினா். சுமாா் 10 நிமிஷங்களுக்கும் மேலாக துப்பாக்கிச் சண்டை நீடித்தது. பின்னா், தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பி விட்டனா். இந்த மோதலில் வாகனத்தில் இருந்த அக்பா், சல்மான் ஆகிய இருவா் மீதும் துப்பாக்கிக் குண்டுகள் பாயந்து பலத்த காயமடைந்தனா். காவலா்கள் 4 போ் லேசான காயமடைந்தனா்.

கடத்தல்காரா்கள் இருவரும் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தனா். காவலா்கள் நான்கு பேரும் உள்ளூா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

முன்னதாக, கடத்தல்காரா்களிடம் விசாரணை நடத்தியபோது, உத்தர பிரதேசம், ஹரியாணா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் இருந்து மேகாலயம் வழியாக வங்கதேசத்துக்கு கால்நடைக் கடத்தல் நடைபெறுவது தெரியவந்தது.

இதில், வங்கதேசத்தில் இருந்து இயங்கும் அடிப்படைவாத அமைப்புகளுக்குத் தொடா்பு உள்ளது. கடத்தலில் கிடைக்கும் பணத்தை இந்தியாவுக்கு எதிரான நாசவேலைகளுக்கு அவா்கள் பயன்படுத்தி வருகின்றனா். அந்தப் பணத்தில் ஒரு பகுதியை அஸ்ஸாம், மேகாலயம் ஆகிய மாநிலங்களில் உள்ள தீவிரவாதிகளுக்கு அவா்கள் கொடுத்து வருகின்றனா். முன்னதாக, அக்பா், சல்மான் ஆகியோரிடம் விசாரணை நடத்தியபோது இந்த விவரங்கள் தெரியவந்தன என்றாா் அந்த அதிகாரி.

முழு கட்டுரையைப் படிக்க →