இந்தியா

தில்லியின் புதிய தலைமைச் செயலாளராக நரேஷ் குமார் நியமனம்

தில்லியின் புதிய தலைமைச் செயலாளராக 1987ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரி நரேஷ் குமாரை உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை நியமித்து உத்தரவிட்டுள்ளது.

DIN

புது தில்லி: தில்லியின் புதிய தலைமைச் செயலாளராக 1987ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரி நரேஷ் குமாரை உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை நியமித்து உத்தரவிட்டுள்ளது.

தற்போதைய தலைமைச் செயலாளர் விஜய் குமார் தேவ் விருப்ப ஓய்வுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

1987ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான விஜய் குமார் தேவ், அருணாச்சல பிரதேசம், கோவா, மிசோரம் மற்றும் யூனியன் பிரதேசத்தின் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றியுள்ளார். 

தேசிய கனிம வளர்ச்சிக் கழகத்தின் தலைவராக இருந்துவரும் தர்மேந்திரா, அருணாச்சலப் பிரதேசத்தின் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  இவர் 1989 ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரி ஆவார். 

அருணாச்சல பிரதேசத்தின் தலைமைச் செயலாளராக இருந்து வரும் 1992 ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான ராஜீவ் வர்மா, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 3 மணிநேரத்துக்கு 8 மாவட்டங்களில் மழை!

உத்தரகண்ட்டில் மேகவெடிப்பு: மோப்ப நாய்கள் உதவியுடன் மீட்புப் பணிகள் தீவிரம்!

ஜம்மு - காஷ்மீரில் முதல்முறையாக பொது பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் எம்எல்ஏ கைது: வலுக்கும் கண்டனம்!

நவராத்திரி - தீபாவளி வரை சுதேசி மேளா நடத்த அறிவுரை!

ஆயுஷ் துணை மருத்துவப் பட்டயப்படிப்புகள்: செப். 23 வரை விண்ணப்பிக்கலாம்!

SCROLL FOR NEXT