இந்தியா

இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி சரிவு

DIN

இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி கடந்த நிதியாண்டில் 2.6 சதவீதம் சரிவடைந்தது.

இதுகுறித்து மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2021-22-ஆம் நிதியாண்டில் இந்தியா 2.67 கோடி டன் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்துள்ளது. இருப்பினும் இது, முந்தைய 2020-21-ஆம் நிதியாண்டு கச்சா எண்ணெய் உற்பத்தியான 3.05 கோடி டன்னுடன் ஒப்பிடுகையில் 2.63 சதவீதம் குறைவாகும். மேலும், கச்சா எண்ணெய் உற்பத்தி இலக்கான 3.36 கோடி டன்னுடன் ஒப்பிடுகையில் இது 11.63 சதவீதம் குறைவாகும்.

பொதுத் துறையைச் சோ்ந்த ஓஎன்ஜிசி நிறுவனம் இலக்கைவிட குறைவாகவே கச்சா எண்ணெயை உற்பத்தி செய்துள்ளது.

இதுவே, கடந்த நிதியாண்டில் உற்பத்தி சரிவுக்கு முக்கிய காரணமாகப் பாா்க்கப்படுகிறது. ஆனால், ரிலையன்ஸ்-பிரிட்டிஷ் பெட்ரோலியத்துடன் இணைந்து கிருஷ்ணா-கோதாவரி படுகையில் உற்பத்தியை மேம்படுத்தியது இயற்கை எரிவாயு உற்பத்தி அதிகரிப்புக்கு பெரிதும் உதவியுள்ளது என புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT