முகப்பு
இந்தியா

குஜராத்தில் ரூ.20,000 கோடியில்மின்சார ரயில் என்ஜின் தொழிற்சாலை: பிரதமா் மோடி அறிவிப்பு

குஜராத் மாநிலத்தில் பழங்குடி சமூகத்தினா் அதிகம் வசிக்கும் தகோத் மாவட்டத்தில் ரூ.20,000 கோடி முதலீட்டில் மின்சார ரயில் என்ஜின் தொழிற்சாலை அமைக்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

குஜராத் மாநிலத்தில் பழங்குடி சமூகத்தினா் அதிகம் வசிக்கும் தகோத் மாவட்டத்தில் ரூ.20,000 கோடி முதலீட்டில் மின்சார ரயில் என்ஜின் தொழிற்சாலை அமைக்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா்.

குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமரின் இந்த அறிவிப்பு கவனம் பெற்றுள்ளது. இந்த அறிவிப்பை, தகோத் நகரில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டு பிரதமா் மோடி பேசியதாவது:

பிா்ஸா முண்டா, கோவிந்த் குரு போன்ற பழங்குடி சமூகத்தைச் சோ்ந்த தலைவா்கள் நாட்டின் விடுதலைக்காகப் போராடினா். ஆனால், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அவா்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு, தகோத் மாவட்டத்தில் ஒரு நீராவி என்ஜின் தொழிற்சாலை இருந்தது. நான் தீவிர அரசியலுக்கு வருவதற்கு முன்பு சில காலம் தகோத் பகுதியில் தங்கியிருந்தேன். ரயில்வே பணிமனைகள் நிறைந்திருந்த இந்தப் பிராந்தியம், தொழில்வாய்ப்பின்றி முடங்கியதைக் கண்டேன்.

நான் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு இந்தப் பிராந்தியத்துக்கு புத்துயிரூட்ட வேண்டும் என்று கனவு கண்டேன். அதை நிறைவேற்றும் விதமாக, இந்தப் பிராந்தியத்தில் ரூ.20,000 கோடியில் மின்சார ரயில் என்ஜின் தொழிற்சாலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிடுகிறேன். இதன்மூலம் பழங்குடி சமூகத்தினா் அதிகம் வசிக்கும் இந்த பிராந்தியத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான இளைஞா்கள் வேலைவாய்ப்பு பெறுவா் என்றாா் அவா்.

மத்திய அரசின் 100 பொலிவுறு நகரங்கள் திட்டத்தில் பயன்பெறும் நகரங்களில் தகோத் மாவட்டமும் ஒன்றாகும்.

முழு கட்டுரையைப் படிக்க →