இந்தியா

கார்கோனில் 4 மணி நேர ஊரடங்கு தளர்வு

கலவரத்தால் பாதிக்கப்பட்ட மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் நகரில் விதிக்கப்பட்டிருந்த நான்கு மணி நேர ஊரடங்கு உத்தரவை உள்ளூர் நிர்வாகம் தளர்த்தியுள்ளது. 

DIN

கலவரத்தால் பாதிக்கப்பட்ட மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் நகரில் விதிக்கப்பட்டிருந்த நான்கு மணி நேர ஊரடங்கு உத்தரவை உள்ளூர் நிர்வாகம் தளர்த்தியுள்ளது. 

கடந்த ஏப்ரல் 10-ம் தேதி ராம நவமி ஊர்வலத்தின்போது வன்முறை வெடித்ததையடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், சாலைகளில் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.

வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்படாததால் மக்கள் அருகில் உள்ள கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்கலாம் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெட்ரோல் பங்குகள், நியாய விலைக் கடைகளில் மண்ணெண்ணெய் விற்பனை நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இதுவரை 159 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தலைமறைவாக உள்ள 106 பேர் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு தலா ரூ.10,000 பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா போபாலில் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாற்றத்தைப் பாா்வையில் தொடங்குவோம்!

பண்டிகைக் காலம்: 2 மாதங்களில் 69 சிறப்பு ரயில்கள் 374 முறை இயக்கம்

போக்குவரத்து பணியாளா்களுக்கு ரூ.6.15 கோடி சாதனை ஊக்கத் தொகை

உங்க கனவ சொல்லுங்க திட்டம்: ஆட்சியா் ஆய்வு

13.1.1976: பீகாரில் வரதட்சிணை வாங்காதவருக்கே அரசு வேலை - விதிகளை திருத்த பீகார் அரசு முடிவு: முதல்வர் தகவல்

SCROLL FOR NEXT