இந்தியா

பிரதமரால் உண்மையை சிறையில் அடைக்க முடியாது: ராகுல் காந்தி கண்டனம்

DIN

புதுதில்லி: காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானியின் கைது ஜனநாயக மற்றும் அரசியலமைப்புக்கு விரோதமானது என்றும், கருத்து வேறுபாடுகளை நசுக்க முயற்சிப்பதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடியால் உண்மையை சிறையில் அடைக்க முடியாது என்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வியாழக்கிழமை கூறினார்.

மேவானி ட்விட்டரில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து கருத்து பதிவிட்டிருந்தார். அஸ்ஸாம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அதிகாலையில் அஸ்ஸாமுக்கு விமானம் மூலம் அழைத்து செல்லப்பட்டார்.

குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானியை அஸ்ஸாம் காவல்துறை கைது செய்துள்ளது ஜனநாயகமற்ற விதம், அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது மற்றும் அவரை மக்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்த மக்களை அவமதிக்கும் செயலாகும் என்று ராகுல் காந்தி தனது ட்விட்டரில் கூறினார்.

அஸ்ஸாம் காவல்துறையினரால் நள்ளிரவில் ஜிக்னேஷ் மேவானியை சட்டவிரோதமான மற்றும் அரசியலமைப்புச் சட்ட விரோதமாக கைது செய்தது பாஜகவின் சர்வாதிகாரத்தின் சமீபத்திய சான்றாகும் என்று கூறினார்.

ஒரு மக்கள் பிரதிநிதியின் இத்தகைய கைது, அவர்களின் விமர்சனத்திற்கு பயப்படுவதைக் காட்டிக் கொடுப்பது மட்டுமல்லாமல், நமது ஜனநாயகத்தின் அடித்தளத்தையும் தாக்குகிறது என்று அவர் ஒரு ட்விட்டரில் ராகுல் காந்தி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரியாதை...

திருவள்ளூா் நகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நீா்மோா்: 3 இடங்களில் வழங்க ஏற்பாடு

மோா்தானா அணை திறந்தும் நெல்லூா்பேட்டை ஏரிக்கு வராத நீா்: குடியாத்தம் மக்கள் ஏமாற்றம்

5 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

ஆண்டாா்குப்பம் முருகா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

SCROLL FOR NEXT