மே 6ல் தெலங்கானா செல்கிறார் ராகுல் காந்தி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருகிற மே 6 ஆம் தேதி தெலங்கானாவிற்கு வருகை தருகிறார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருகிற மே 6 ஆம் தேதி தெலங்கானாவிற்கு வருகை தருகிறார்.
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்ததை அடுத்து, அடுத்து வரவுள்ள தேர்தல்களின் மீது கவனம் செலுத்தி வருகிறது.
இந்நிலையில் தெலங்கானா மாநிலத்திற்கு 2023 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வியூகங்களை காங்கிரஸ் கட்சி வகுத்து வருகிறது.
இதையடுத்து தெலங்கானா காங்கிரஸ் எம்எல்ஏ ஜக்கா ரெட்டி செய்தியாளர்களிடம் பேசியதாவது:
மே 6 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெலங்கானா வருகிறார். மக்கள் பிரச்னைகள் குறித்துப் பேசவும் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) அரசின் தோல்வியை எடுத்துரைக்கவிருக்கிறார்.
மே 6 ஆம் தேதி தெலங்கானாவில் நடைபெற உள்ள கூட்டத்தில் தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். தெலங்கானாவில் மக்கள் அவதிப்படுகின்றனர். காவல்துறை அதிகாரிகளால் சாமானிய மக்கள் அதிகம் துன்புறுத்தப்படுகின்றனர். தெலங்கானா ராஷ்டிர சமிதி அரசு மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யத் தவறிவிட்டது. காங்கிரஸ் இங்குள்ள மக்களுக்கு ஒரு மாற்றாக இருக்கும் என்று பேசியுள்ளார்.