ஆந்திரம்: மின்சார பைக் பேட்டரி வெடித்து ஒருவர் பலி
ஆந்திரத்தில் மின்சார பைக் பேட்டரியை சார்ஜ் செய்யும்போது வெடித்ததில் ஒருவர் பலியானார்.
ஆந்திரத்தில் மின்சார பைக் பேட்டரியை சார்ஜ் செய்யும்போது வெடித்ததில் ஒருவர் பலியானார்.
ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள குலாபிபேட்டையில் சிவகுமார் நேற்றிரவு தனது படுக்கை அறையில் மின்சார பைக் பேட்டரிக்கு மின்இணைப்பு கொடுத்துவிட்டு தூங்கியுள்ளார். அப்போது அதிகாலை 3 மணியளவில் மின்சார பைக்கின் பேட்டரி திடீரென வெடித்தது. இதில் அனைவரும் வீட்டுக்குள் சிக்கிக்கொண்டனர்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சிவக்குமார் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பலியானார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க- தனியார் தொலைக்காட்சி ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
மேலும் படுகாயமுற்ற மனைவி ஆர்த்தி(30), பிந்துஸ்ரீ(10), சசி(6) மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். முன்னதாக கடந்த 19ஆம் தேதி தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டத்தில், வீட்டிற்குள் சார்ஜில் வைக்கப்பட்டிருந்த மின்சார பைக்கின் பேட்டரி திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதில் 80 வயது முதியவர் பலியானார்.
காப்பாற்ற முயன்ற அவரது மகன் பிரகாஷ், மனைவி கமலம்மா, மருமகள் கிருஷ்ணவேணி ஆகியோர் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.