இந்தியா

வழக்குரைஞர்களின் சேமநல நிதி ரூ.10 லட்சமாக உயர்வு: மு.க. ஸ்டாலின்

DIN

சென்னை: தமிழகத்தில், வழக்குரைஞர்களின் சேமநல நிதி ரூ.7 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பணியின்போது உயிரிழக்கும் வழக்குரைஞர்களுக்கு வழங்கப்படும் சேமநல நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற வழக்குரைஞர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தமிழக முதல்வர் மு.க. ஸ்டான் இன்று இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

சென்னையில் இன்று நடைபெற்ற சென்னை உயர் நீதிமன்ற விழாவில் பங்கேற்றுப் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சட்டத்தின் குரலாக மட்டுமல்லாமல் நாட்டு மக்களின் மனசாட்சியாகவும் இருக்கிறார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா என்று குறிப்பிட்டார்.

மேலும், உச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க வேண்டும் என்று  வேண்டுகோள் விடுத்தார்.

தமிழ் மொழியை நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்கவும் கோரிக்கை வைத்தார். இவ்விரு கோரிக்கைகளையும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பரிசீலிப்பார் என்று நம்புவதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

மேலும், வழக்குரைஞர்களின் சேமநல நிதி ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பினை ஸ்டாலின் வெளியிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

யாரோ பிரிகிற்பவரே?

SCROLL FOR NEXT