இந்தியா

கரோனா: ஏப்.27-ல் முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை

DIN

கரோனா அதிகரித்து வரும் நிலையில் ஏப்.27-ல் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசிக்கிறார். 

நாட்டில் தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கரோனா உறுதி செய்யப்படும் எண்ணிக்கை திடீரென அதிகரித்திருப்பதற்கு, புதிய ஒமைக்ரான வகை கரோனாவின் உருமாறிய வைரஸ் பரவி வருவது காரணமாக இருக்கலாம் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே கரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,527 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 0.56 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. நாட்டில் கரோனா அதிகரித்து வரும் நிலையில் ஏப்.27-ல் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசிக்கிறார். 

காணொளி மூலம் நடைபெறும் ஆலோசனையில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT