இந்தியா

ஆசிரியர் பணி நியமனம்: பிகாரில் 445 போலி விண்ணப்பதாரர்கள்

பிகாரில் தொடக்கப் பள்ளி ஆசிரியர் பணி நியமனத்தில் 445 விண்ணப்பதாரர்கள் மோசடி செய்துள்ளதாக கல்வித்துறை கண்டறிந்துள்ளது.  

DIN

பிகாரில் தொடக்கப் பள்ளி ஆசிரியர் பணி நியமனத்தில் 445 விண்ணப்பதாரர்கள் மோசடி செய்துள்ளதாக கல்வித்துறை கண்டறிந்துள்ளது. 

கலந்தாய்வின்போது விண்ணப்பதாரர்கள் சமர்ப்பித்த ஆவணங்களைச் சரிபார்க்கும் போது மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டன. 

தொடக்கப் பள்ளி ஆசிரியர் பணிக்கும் மொத்தம் 1,377 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில், 932 விண்ணப்பதாரர்களின் ஆவணங்கள் சரியாக இருப்பதாகவும், மீதமுள்ள 445 பேரின் விண்ணப்பம் சந்தேகத்திற்குரிய ஆவணங்கள் சமர்ப்பித்ததாகவும் மாநில கல்வி அமைச்சர் விஜய் குமார் சௌத்ரி தெரிவித்தார். 

இதுகுறித்து, மேலும் அவர் கூறியதாவது, 

சி.டி.இ.டி மற்றும் டெட் அலுவலகங்களில் சந்தேகத்திற்குரியோர்களின் ஆவணங்களை முழுமையாகச் சரிபார்க்கும்படி அதிகாரிகளை நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம். தவிர, அவர்களின் பல்கலைக்கழக ஆவணங்களையும் சரிபார்க்கவும் அறிவுறுத்தியுள்ளோம். 

கோபால்கஞ்சில் மட்டும் அதிகபட்சமாக 223 விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வின் போது போலி ஆவணங்கள் சந்தேகத்திற்கிடமான வகையில் மோசடி ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளனர். இதைத்தவிர, கிழக்கு மற்றும் மேற்கு சம்பாரண் மாவட்டங்களில் தலா 80 பேர், மதுபானியில் 38 பேர், நாலந்தாவில் 15 பேர், முசாபர்பூர் மற்றும் நவாடாவில் தலா 3 பேர், போஜ்பூரில் இருந்து 2 பேர், கதிஹார் மற்றும் சீதாமர்ஹி மாவட்டங்களிலிருந்து தலா ஒருவரும்  விண்ணப்பித்துள்ளனர். 

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்கள் மீது ஏற்றுதல் மற்றும் மோசடி தொடர்புடைய ஐபிசி பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்படும் என்றார் சௌத்ரி. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மழையூரில்.... லட்சுமி பிரியா!

என்ன அழகு... எத்தனை அழகு... ஜான்வி கபூர்!

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

ராகுல் காந்திக்கு 7 நாள் அவகாசம்! அதற்குள்... - தேர்தல் ஆணையத்தின் காலக்கெடு!

அழகிய கண்ணே... ராஷா ததானி!

SCROLL FOR NEXT