முகப்பு
இந்தியா

16 யூடியூப் செய்தி சேனல்களை முடக்கியது மத்திய அரசு

தேசிய பாதுகாப்பு குறித்து தவறான தகவல்களை பரப்பியதாக மேலும் 16 யூடியூப் சேனல்களை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் திங்கள்கிழமை முடக்கியுள்ளது.

Updated On : 25 ஏப்ரல், 2022 at 6:29 PM
பகிர்:

தேசிய பாதுகாப்பு குறித்து தவறான தகவல்களை பரப்பியதாக மேலும் 16 யூடியூப் சேனல்களை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் திங்கள்கிழமை முடக்கியுள்ளது.

இதுகுறித்து தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில்,

“நாட்டின் பாதுகாப்பு, வெளியுறவு மற்றும் மதநல்லிணக்கம் குறித்து தவறான தகவல்கள், உறுதி செய்யப்படாத தகவல்களை பரப்பிய 16 யூடியூப் செய்தி சேனல்கள் முடக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதில், பாகிஸ்தானை சேர்ந்த 6 செய்திச் சேனல்களும் அடங்கும். இந்த சேனல்களின் மொத்த பார்வையாளர்களின் எண்ணிக்கை 68 கோடி ஆகும்” எனத் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் 22 யூடியூப் சேனல்களை முடக்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.